வொர்ஸ்டு டா டேய்., பூனை கடிச்சிதுன்னு சிகிச்சைக்கு போன, நாய் கடிச்சு வைத்த கொடுமை!  - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலம் : பூனை கடித்ததற்கு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற இளம்பெண்ணை, நாய் கடித்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருவனந்தபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் இன்று பூனை கடித்ததால் சிகிச்சை பெற அதானி துறைமுகத்திற்கு அருகிலுள்ள பொது சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக வந்துள்ளார்.

பூனை கடித்ததற்கு ஏற்கனவே இரு ஊசிகள் போட்ட நிலையில் இன்று மூன்றாவது முறை ஊசி போடுவதற்காக காத்திருந்த அந்த இளம்பெண்ணை தெருநாய் ஒன்று கடித்தது. 

அந்த இளம்பெண் காத்திருந்த இருக்கையின் கீழ் படுத்திருந்த தெருநாய் தான் அவரை கடித்ததாக தெரிகிறது.

இதனையடுத்து அந்த இளம்பெண்ணுக்கு மருத்துவமனை செவிலியர்களின் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின் மேல்சிகிச்சைக்காக 15 கிமீ தொலைவில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார் அந்த இளம்பெண்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cat and dog bite young woman kerala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->