குடியரசு தின விழாவில் கோரிக்கை வைத்த இருளர் மக்கள் - காரணம் என்ன?
irular peoples request in republic day function
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் தென்பகுதி கடலோரத்தில் பல ஆண்டுகளாக 80-க்கும் மேற்பட்ட இருளர்கள் தற்காலிக குடில் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு குடியிருப்பு வசதி, ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை, பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய வசதிகள் இன்றி குடும்பத்துடன் பாதுகாப்பற்ற நிலையில் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் முதல் முறையாக இன்று 76வது குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில், அனைத்து குடில் குடியிருப்பு வாசிகளும் ஒன்று சேர்ந்து அப்பகுதியில் தேசியக்கொடி ஏற்றினர்.
பின்னர் அவர்கள் அனைவரும் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தினத்திற்குள் தங்களுக்கு அத்தியாவசிய வாழ்வாதார குடியுரிமை வசதிகள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுதிமொழியும் ஏற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், சமூக ஆர்வலர் மேத்யு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
English Summary
irular peoples request in republic day function