புதுச்சேரி: இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் நெல்லை இளைஞர் கைது!
Puducherry Harassment case
புதுச்சேரியைச் சேர்ந்த 29 வயது கிறிஸ்துவ மத பெண் (பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவரின் பெயர் மறைக்கப்படும்) திருவனந்தபுரத்தில் மருந்தாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவர் கிறிஸ்துவ பிரசங்கக் கூட்டத்திற்காக ரயிலில் பயணம் செய்தபோது, திருநெல்வேலி ரயில் நிலைய காவலர் சுபாஷுடன் (வயது 37) பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சுபாஷ் வெள்ளிக்கிழமை விருந்துக்கு அழைத்து மது கொடுத்த நிலையில், போதையில் இருந்த அப்பெண்ணை சுபாஷ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் தனது நண்பரான அரசு போக்குவரத்து ஊழியர் முருகேசனையும் (வயது 37) வரவழைத்து இருவரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
போதை தெளிந்த பிறகு, பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, புகாரின் அடிப்படையில் போலீசார் சுபாஷ் மற்றும் முருகேசன் இருவரையும் கைது செய்தனர்.
English Summary
Puducherry Harassment case