காவிரி நதிநீர் பங்கீடு! தமிழக அரசின் கோரிக்கை - உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
Cauvery issue TNGovt SC Case 01092023
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பான வழக்கை, வருகின்ற செப்டம்பர் 6ஆம் தேதி விசாரணை செய்வதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்லாண்டு காலங்களாக காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழக அரசுக்கும், கர்நாடகா அரசுக்கும் இடையே பிரச்சனை நீடித்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்திற்கு ஆகஸ்ட் மாதத்திற்கான நீரை கர்நாடகா அரசு தர மறுப்பதாக கூறி, தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், “தமிழகத்திற்கு வினாடிக்கு பத்தாயிரம் கன அடி நீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அதனை 24 ஆயிரம் கன அடி நீராக திறந்த விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் காவிரி ஆணையம் உத்தரவிட்டத்தின்படி தண்ணீர் திறக்கப்பட்டதா? இல்லையா? என்பது குறித்து ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தரப்பில், இந்த வழக்கை நான்காம் தேதி விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை அடுத்து வருகின்ற 6-ம் தேதி வழங்கி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
English Summary
Cauvery issue TNGovt SC Case 01092023