டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது! அதிரடியில் இறங்கிய சிபிஐ! - Seithipunal
Seithipunal


கலால் கொள்கை வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதலமைச்சராக மனிஷ் சிசோடியா இருந்து வருகிறார். 

இந்த நிலையில், டெல்லி அரசு மதுபானக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர்.

தொடர்ந்து, அவரிடம் விசாரணையும் நடைபெற்ற நிலையில், 3 மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கில் குறித்து சிபிஐ குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.

யாரும் எதிர் பாராதவிதமாக கடந்த ஜனவரி மாதமும் மணீஷ் சிசோடியா வீட்டில் சோதனை நடைபெற்றது. அப்போது விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.

இந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட விசாரணைக்கு சிபிஐ முன் மணீஷ் சிசோடியா ஆஜராகினார். அவரிடம் பல மணிநேரமாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், சற்றுமுன் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

,முன்னதாக, சிபிஐ தலைமை அலுவலக வளாகத்தின் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. தடையை மீறி வெளியே போராட்டம் நடத்திய ஆம் ஆத்மி கட்சியினர் கைது செய்யப்பட்டனர். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBI arrests Delhi Deputy CM Manish Sisodia for liquor policy case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->