டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்!
CBI Case SC Delhi CM Bail
டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21ஆம் தேதி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
மக்களவைத் தேர்தல் காரணமாக முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்தது.
தேர்தல் முடிந்து ஜூன் 26 ஆம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அன்றுமுதல் திகார் சிறையில் இருந்துவரும் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு பல கட்டங்களமாக நடந்து வந்த நிலையில், வழக்கில் விசாரணை முடிவடைந்த இன்று தீர்ப்பு வழங்க உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதில் எந்த விதிமுறை மீறலும் இல்லை என்று கூறிய நீதிபதிகள், கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு உள்ளனர்.
English Summary
CBI Case SC Delhi CM Bail