CBSE 10&12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.? - CBSE விளக்கம்.! - Seithipunal
Seithipunal


CBSE 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்ற தகவல் உண்மையில்லை என CBSE  விளக்கம் அளித்துள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (CBSE) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வுகளை சுமார் 21.8 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.

அதேபோல் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின்(CBSE) பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 16.9 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.

இந்த நிலையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியது.

இதனையடுத்து சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என இணையத்தில் போலியான தகவல் வெளியாவதாக சிபிஎஸ்சிஇ விளக்கம் அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBSE explain about 10th and 12th results


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->