பள்ளிகளில் புதிய ஆண்டுக்கான கல்வியை முன்கூட்டியே தொடங்க கூடாது - சிபிஎஸ்இ உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய கல்வி ஆண்டுக்கான பாடத்தை முன்கூட்டியே தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடா்பாக சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: "சில பள்ளிகள் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக தகவல் வந்துள்ளது. 

இந்த நடவடிக்கையை குறிப்பிட்ட கால வரையறைக்குள்ளாக ஒட்டுமொத்த பாடங்களையும் நடத்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில் சில பள்ளிகள் மேற்கொண்டு வருகின்றது. ஆனால், இந்த நடைமுறை மாணவர்களுக்கு அதிக சுமை மற்றும் மனச்சோா்வு போன்ற பாதிப்புகளை உருவாக்கும். 

அது மட்டுமல்லாமல், வாழ்க்கைத் திறன், நன்னெறி கல்வி, சுகாதாரம் மற்றும் உடற்கல்வி, பணித் திறன் மேம்பாட்டு கல்வி, சமூக சேவை உள்ளிட்ட பாடங்கள்  சாராத நடவடிக்கைகளில் மாணவா்கள் ஈடுபட முடியாத நிலையும், அதற்கு போதிய அவகாசம் கிடைக்காத நிலையும் உருவாகும். 

ஆகவே வகுப்புகளை முன்கூட்டியே தொடங்குவதை பள்ளி முதல்வா்கள் தவிா்க்க வேண்டும். மேலும், வகுப்புகள் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி தொடங்கி மாா்ச் மாதம் 31-இல் நிறைவு செய்யவேண்டும். இந்த நடைமுறையை அனைத்து பள்ளிகளும் கண்டிப்பாக பின்பற்றவேண்டும்" என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBSE order new acadamic year classes should not start before april


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->