அதிர்ச்சி தகவல் டெலிவரி செய்யப்பட்ட ஐஸ்கிரீமில் பூரான் !!
centipede in amul icecream
இந்த கோடை காலத்தில் ஐஸ்கிரீமின் தேவை அதிகரித்து வருகிறது. பெரிய மெட்ரோ நகரங்களில் ஆன்லைனில் இந்த ஐஸ்கிரீம் போன்ற உணவுக்கு அதிக தேவை உள்ளது. மும்பையின் மலாட் மற்றும் உ.பி.யின் நொய்டா பகுதியில் உள்ள இரண்டு வெவ்வேறு குடும்பங்கள் ஆன்லைனில் ஐஸ்கிரீமை ஆர்டர் செய்தன. இரண்டு ஆர்டர்களிலும் டெலிவரி செய்யப்பட்ட ஐஸ்கிரீமில் பூச்சிகள் காணப்பட்டன. ஐஸ்கிரீமில் பூரான் ஒன்று உறைந்திருந்தது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் வசிக்கும் பெண் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் புழு இருந்ததாக புகார் அளித்துள்ளார். அவரது குழந்தைகள் மாம்பழ மில்க் ஷேக் வேண்டும் என்று சொல்வதாகக் கூறினார். இதற்காக பிளிங்கிட் என்ற ஆன்லைன் செயலியில் இருந்து ரூ.195 மதிப்புள்ள அமுல் வெண்ணிலா மேஜிக் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார்.
அவர் ஐஸ்க்ரீம் பேக்கைத் திறந்தபோது, அதற்குள் உறைந்திருந்த பூரான் ஒன்று தெரிந்தது. ஐஸ்கிரீமில் புழு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள்.இதன் பேரில், புகார் அளிக்கப்பட்டது. பிளிங்கிட் ஆன்லைன் ஆப் அவர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்தது, ஆனால் அமுல் இதற்க்கு பதிலளிக்கவில்லை.
இதேபோல் மும்பையின் மலாட் பகுதியில் பெண் ஒருவர் ஆன்லைனில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார். ஐஸ்கிரீம் பேக்கை திறந்து பார்த்தபோது, அதில் புழு இருந்தது. அந்த பெண்ணும் புகார் அளித்துள்ளார்.
பால் பொருட்கள் துறையில் அமுல் ஒரு புகழ்பெற்ற பெயர். இது பால் மற்றும் அதன் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதில் உலகளவில் அறியப்படுகிறது. அமுலின் சீஸ், தயிர், லஸ்ஸி, ஐஸ்கிரீம் மற்றும் பிற உணவுப் பொருட்கள் இந்தியாவில் மிகவும் பிரபலமானவை.
English Summary
centipede in amul icecream