ஒடிசா: சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்தில் 3 பேர் பலி.! மத்திய, மாநில அரசு நிவாரணம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கோரே ரயில் நிலைய நடைமேடையில் இன்று காலை 6.44 மணியளவில் சரக்கு ரயில் தடம் புரண்டததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

பலோர்-புவனேஸ்வர் ரயிலில் ஏறுவதற்கு ஏராளமான பயணிகள் காத்திருந்தனர், அப்போது அந்த வழியாக வந்த டோங்கோபோசியில் இருந்து சத்ரபூருக்குச் செல்லும் சரக்கு ரயில் தடம் புரண்டது. இதில் எட்டு வேகன்கள் பிளாட்பாரம் மற்றும் காத்திருப்பு கூடத்தின் மீது மோதியது. இதனால் ரயில் நிலைய கட்டிடம் சேதமடைந்துள்ளது.

மேலும் இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் காயமடைந்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோரே ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ 1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central and state government relief announcement for 3 killed goods train derails in odisha


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->