நிதித்துறை அமைச்சகத்தில் ஊழியர் கைது.! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள மத்திய நிதித்துறை அமைச்சகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தவர் சுமித்.  இவர் அங்கு கம்ப்யூட்டர் பிரிவில் 'டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டராக' வேலை பார்த்து வந்தார். 

இந்நிலையில் இவர் வெளிநாடுகளிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொண்டு மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் ரகசிய தகவல்களை உளவு பார்த்து கசிய விட்டது தெரியவந்தது. 

இதையறிந்த உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் பணம் வாங்கிக்கொண்டு உளவு பார்த்து வந்த சுமித் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமித்தை அதிரடியாக கைது செய்தனர். 

இதையடுத்து, சம்பவம் தொடர்பாக அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, நிதித்துறை அமைச்சக ரகசிய தகவல்களை அவர் உளவு பார்த்து வெளிநாடுகளுக்கு ரகசிய தகவல் அனுப்பியது வெளிச்சத்திற்கு வந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central financial department employee arrested for spying to foreign countries


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->