தடை விதிக்கப்பட்ட பி.எப்.ஐ.! ஐந்து ஆண்டுகளுக்கு தடையை நீட்டிய மத்திய அரசு..! - Seithipunal
Seithipunal


பி.எப் ஐ என்ற இஸ்லாமிய அமைப்பின் மீது நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் என்று பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.

இந்த புகார் குறித்து, கடந்த 22-ம் தேதி பதினைந்து மாநிலங்களில் தொண்ணூற்று மூன்று இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில் 106 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பல இடங்களில் கல்வீச்சு, வன்முறை சம்பவங்களும், குறிப்பாக, தமிழ்நாடு, கேரளாவில் பெட்ரோல் வீச்சு சம்பவங்களும் நடைபெற்றது.

இதையடுத்து, நேற்று 2-வது முறையாக உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், கர்நாடகா, அசாம், டெல்லி, குஜராத், மராட்டியம், தெலுங்கானா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பிஎப்ஐ -க்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில், 250-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

இதுவரை நடத்தப்பட்ட இரண்டு சோதனைகளிலும் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய ஆவணங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இந்நிலையில், இன்று பி.எப்.ஐ அமைப்பிற்கு மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது. 

பி.எப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள் இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் செயல்பட மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் இந்த அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central government ban on PFI


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->