சர்க்கரை ஏற்றுமதிக்கான தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சர்க்கரை ஏற்றுமதிக்கான தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகில் அதிக அளவு சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னணியில் உள்ளது. இருப்பினும் உள்நாட்டில் சர்க்கரையின் தேவையை கருத்தில் கொண்டு, கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் அக்டோபர் 31-ந்தேதி வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இந்நிலையில் சர்க்கரை ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு 2023-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி வரை ஓராண்டுக்கு நீட்டித்து உள்ளது. உள்நாட்டு சந்தையில் கிடைக்கும் சர்க்கரையை அதிகரிக்க, சர்க்கரை ஏற்றுமதிக்கான தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும், சர்க்கரைக்கு பதிலாக சுவையை கூட்ட கூடிய இனிப்பூட்டிகளின் ஏற்றுமதிகளுக்கு இந்த தடை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central government order banning sugar export for another year


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->