எட்டு தீவிரவாத அமைப்புகளுடன் ஒப்பந்தம் போட்ட மத்திய அரசு! என்ன காரணம் தெரியுமா?!  - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தில் தீவிரவாத குழுக்கள் பல இயங்கி வருகின்றன இவற்றில் சில கடந்த 2012-ம் ஆண்டு முதல் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன. இக்குழுவைச் சேர்ந்தவர்கள் முகாம்களில் தங்கியிருந்த நிலையில் அசாம் மாநிலத்தின் 8 தீவிரவாத அமைப்புகளுடன் நேற்று முத்தரப்பு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. 

ஆதிவாசி தேசிய விடுதலைப் படை, ஆதிவாசி கோப்ரா அசாம் அமைப்பு, ஆதிவாசி மக்கள் ராணுவம் ஆகியவை உட்பட 8 தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோர் முன்னிலையில் இந்த அமைதி ஒப்பந்தத்தில் கையெழுதாகி உள்ளது.

தடை செய்யப்பட்ட உல்பா, காமத்பூர் விடுதலை அமைப்பு ஆகியவை தவிர இதர தீவிரவாத அமைப்புகள் மத்திய அரசுடனான இந்த அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

சில மாதங்களுக்கு முன்பு குகி பழங்குடி யூனியன் தீவிரவாதிகள், திவா விடுதலைப் படை மற்றும் ஐக்கிய கூர்க்கா மக்கள் அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடைந்தனர்.

அசாம் மாநிலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தில்  ஏற்பட இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என சமுக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central government signed an agreement assam organizations


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->