தீபாவளி போனஸ் - ஊழியர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்த மத்திய அரசு.! - Seithipunal
Seithipunal


தீபாவளி போனஸ் - ஊழியர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்த மத்திய அரசு.!

தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்குக் குறைவான நாட்களே இருப்பதால், தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு எப்போது வரும் என்று மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில், போனஸ் தொடர்பான முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'சி' பிரிவு & கெசட் ரேங்க் இல்லாத 'பி' பிரிவு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. துணை ராணுவப் படைகளில் பணிபுரிவோருக்கும் தீபாவளி போனஸ் அளிக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. 

அதிகபட்சமாக ரூ.7000 வரை போனஸ் அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. எந்தெந்த ஊழியர்களுக்கு எவ்வளவு போனஸ் கிடைக்கும் என்பது குறித்து மத்திய அரசு விரிவான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central govt announce deepavali bonous to employees


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->