ராணுவ நகர்வுகள், நடவடிக்கை குறித்து செய்தி வெளியிட வேண்டாம்! ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுரை! - Seithipunal
Seithipunal



பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டாம் என்று மத்திய அரசு ஊடகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குப் பின்னர், தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை ஊடகங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், தேசத்தின் பாதுகாப்பை முன்னிட்டு அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக, ராணுவ இயக்கங்கள், நகர்வுகள் தொடர்பான எந்த தகவலும் அல்லது காட்சியும் வெளியிடக்கூடாது என்றும், வீடியோ, புகைப்படங்களை பகிரக் கடுமையான தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கார்கில் போர், மும்பை பயங்கரவாதம், காந்தஹார் விமான கடத்தல் உள்ளிட்ட சந்தர்ப்பங்களில் கட்டுப்பாடில்லா செய்தி வெளியீடுகள் நாட்டின் பாதுகாப்பை பாதித்ததாக நினைவூட்டப்பட்டுள்ளது. எனவே, இனிமேல் ராணுவ நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. ஊடகங்கள், தேசிய நலனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு படைகளை பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Central Govt announce for news channels for Army


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->