ஹாலிவுட் நடிகருக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' - மத்திய அரசு அறிவிப்பு!
central Govt announced lifetime achievement award hollywood actor
கோவாவில் 54ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா வரும் நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் திரைப்படம் மற்றும் குறும்படங்களை திரையிடுவதற்காக இந்திய பனோரமா பிரிவில் விண்ணப்பங்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் வரவேற்றது.
இந்த நிகழ்ச்சியில் திரைப்படங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை இருந்தது. இந்நிலையில் கோவாவின் 54ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸுக்கு சத்யஜித் ரே சிறந்த வாழ்நாள் விருது வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது, ''புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான மைக்கேல் டக்ளஸுக்கு கேரளாவில் நடைபெறும் 54 வது சர்வதேச திரைப்பட விழாவில் புகழ் பெற்ற சத்யஜித் ரே திரைப்பட வாழ்நாள் விருது வழங்கி கௌரவிக்கப்படுவார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அவருக்கு நமது நாட்டின் மீதுள்ள ஆழ்ந்த அன்பு நன்கு அறியப்பட்டதாகும். நமது செளுமையான சினிமா கலாச்சாரம் மற்றும் தனித்துவமான பாரம்பரியங்களை வெளிப்படுத்த மிக முக்கிய திரைப்பட விழாவிற்கு அவரையும் அவரது மகனை வரவேற்க காத்திருக்கிறோம்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
central Govt announced lifetime achievement award hollywood actor