ராமர் பாலம் இருக்கு.. ஆனா இல்ல..!! நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்..!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஹரியானாவை சேர்ந்த எம்.பி கார்த்திகேயன் சர்மா ராமர் பாலம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர பிரசாத் "இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையின் செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்யப்பட்டதில் ராமன் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியவில்லை. சுமார் 18,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு என்பதால் ராமர் பாலம் பற்றி தகவல் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே 56 கிலோ மீட்டர் தொலைவுக்கு ராமர் பாலம் இருந்ததாக தற்பொழுது கருதப்படுகிறது. ஆனால் கடலில் இருக்கும் சரியான கட்டமைப்பு ஆராய்வது கடினமாக உள்ளது. அந்தப் பகுதியில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குறியீடு இருப்பதாக இப்போதைக்கு சொல்ல முடியும்" என மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.

ராமர் பாலத்தை தேசிய புராதான சின்னமாக அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்த நிலையில் மத்திய அமைச்சரின் இத்தகைய பதில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. ராமர் பாலம் விவகாரத்தில் பாஜகவின் இரட்டை நிலைப்பாடு வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central govt answered not sure there was a Ram Bridge


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->