2024 - 2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்: எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு - முழு விவரம்!
Central Govt Budget 2024
நடப்பு 2024 - 2025 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.
அவரின் அந்த உரையில், மத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து 3ஆவது முறையாக ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. நிச்சயமற்ற தன்மை உள்ளபோதிலும் இந்தியாவின் வளர்ச்சி பிரகாசமாகவே உள்ளது.
நீண்ட கால மூலதன ஆதாய வரி (Long-term capital gains tax) 10%-ல் இருந்து 12.5% ஆக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மொத்த செலவினம் ரூ.48.21 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024 - 25 நிதியாண்டில் அரசின் நிதிப்பற்றாக்குறை 4.9% ஆக குறையும். 4.5% ஆக நிதிப்பற்றாக்குறையை குறைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
2024 - 2025 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு:
பாதுகாப்பு துறைக்கு - 4,54,773 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித் துறைக்கு - 2,65,808 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மைத் துறைக்கு - 1,51,851 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உள் துறைக்கு - 1,50,983 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கல்வித் துறைக்கு - 1,25,638 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறைக்கு - 1,16,342 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறைக்கு - 89,287 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆற்றல் துறைக்கு - 68,769 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சமூக நலத் துறைக்கு - 56,501 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வணிகம் & தொழில்த்துறைக்கு - 47,559 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.