சிறுபான்மை இன மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடையாது! மத்திய அரசு அறிவிப்பு!
central govt canceled the scholarship for minority school students
மத்திய அரசு நடப்பு கல்வி ஆண்டு முதல் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ள அனைத்து குடும்பங்களை சேர்ந்த 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பிரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் 9 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படுவதால் மத்திய சமூக நல மற்றும் பழங்குடியின மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இனி அதே நடைமுறையை சிறுபான்மை இன மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையிலும் பின்பற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு தற்பொழுது ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் கல்வி உதவித் தொகைக்காக ஒதுக்கப்படும் நிதி பெரும் அளவு குறைய உள்ளது. மத்திய அரசின் இத்தகைய செயல் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
ஏற்கனவே நாடு முழுவதும் மத்திய அரசின் நடவடிக்கையால் சிறுபான்மையின மக்கள் நசுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது கல்வி உதவி தொகை நிறுத்தப்பட்டு இருப்பது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
English Summary
central govt canceled the scholarship for minority school students