கல்வியில் பின் தங்கிய 374 மாவட்டங்கள்.!! தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை மாவட்டங்களா.!! வெளியான ஷாக் ரிப்போர்ட்.!!
Central govt has published educationally backward districts list
நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மக்களவையில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் ரெட்டப்பா இந்தியா முழுவதும் கல்வியில் பின்தங்கியுள்ள மாவட்டங்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு இன்று மத்திய அரசு தேசிய பல்கலைக்கழக மானிய குழு அளித்த தகவலின் படி இந்தியா முழுவதும் சுமார் 374 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளதாக மத்திய அரசு பதிலளித்துள்ளது.
அதன்படி, மாநிலம் வாரியாக மாவட்டங்கள் எண்ணிக்கை பின்வருமாறு: அந்தமான் நிக்கோபார் தீவுகள் -2, ஆந்திர பிரதேசம்- 11, அருணாச்சல பிரதேசம் - 11, அசாம் - 12, பீகார் - 25, சத்தீஸ்கர் - 15, லடாக் & ஸ்ரீநகர் - 1, டையூ & டாமன் -2, குஜராத் - 20, ஹரியானா - 7, இமாச்சல் பிரதேசம் - 4, ஜம்மு & காஷ்மீர் - 11, ஜார்கண்ட் - 12, கர்நாடகா - 20, கேரளா - 4, மத்திய பிரதேசம் - 39, மகாராஷ்டிரா - 7, மேகாலயா - 5, மிசோரம் - 7, நாகாலாந்து -1, ஒடிசா - 18, பாண்டிச்சேரி - 1, பஞ்சாப் - 13, ராஜஸ்தான் - 30, சிக்கிம் - 4, திரிபுரா - 4, உத்தர பிரதேசம் - 41, ஜார்கண்ட் - 2, மேற்கு வங்கம் - 17, தமிழ்நாடு - 27 மாவட்டங்கள் கல்வியில் பின் தங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, தேனி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி உள்ளதாக அது அதிர்ச்சியூட்டும் தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
English Summary
Central govt has published educationally backward districts list