பெரும் கலவரம்... மணிப்பூர் மாநிலத்தில் சட்டப்பிரிவு 355 அமல்.! மத்திய அரசு அதிரடி..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பல்வேறு பழங்குடியின, பழங்குடி அல்லாத சமூகத்தினர் வாழ்ந்த வருகின்றனர். அந்த மாநிலத்தில் மெய்டீஸ் என்ற பழங்குடி அல்லாத சமுகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் என்ற அந்தஸ்த்து வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

மெய்டீஸ் சமுகத்திற்கு பட்டியலின பழங்குடியின சமுகம் என்ற அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமுகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் மலைப்பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது.

இதற்கு எதிராக மெய்டீஸ் சமூகத்தினரும் போராட்டம் நடத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்த வன்முறை மெல்ல அண்டையில் உள்ள மலைப்பகுதி மாவட்டங்களுக்கும் பரவியது. பழங்குடியினருக்கும், பழங்குடியினர் அல்லாதோருக்கும் இடையேயான இந்த மோதலால் மணிப்பூரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. சமூகவலைதளங்களில் கலவரம் தொடர்பான காட்சிகளும் பகிரப்பட்டதால் கலவரம் மெல்ல மெல்ல அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது.

மணிப்பூர் மாநிலம் முழுவதும் ஏராளமான கடைகள் வீடுகள் சூறையாடப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டன. மணிபூரில் 3 மணி நேரத்திற்கு மேலாக வன்முறை நீடித்த நிலையில் மாநில போலீஸாரால் வன்முறையை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் கலவரக்காரர்களை கண்டதும் சுட மணிப்பூர் அரசு உத்தரவிட்டது. இதன் காரணமாக மணிப்பூருக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசியலமைப்பு சட்டப்பிரிவு 355ஐ மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதுவரை 20,000 மேற்பட்டோர் மணிப்பூர் மாநிலத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். இவர்கள் அண்டை மாநிலங்களான அசாம் , மிசோரம் மாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். உள்நாட்டு வன்முறைகளை தடுக்கவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் மத்திய அரசுக்கு சட்டப்பிரிவு 355 அதிகாரம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central govt implemented Article 355 in Manipur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->