#BigBreaking || மீண்டும் கொரோனா..!! தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்..!! மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை மணி..!!
Central govt letter to state govts to intensify measures to prevent Corona
உலக அளவில் கொரோனா கொரோனா பரவல் குறைந்தாலும் சில நாடுகளில் தற்பொழுது அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில் போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் உலக அளவில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் 35 லட்சமாக உயர்ந்துள்ளது. உலகில் உள்ள சில நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அனைத்து மாநிலங்களும் கொரோனா பாதிப்பு தடுக்கும் பணிகளை தீவிர படுத்த வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே பின்பற்றப்பட்ட நடைமுறைகளான "கண்டறிதல், தனிமைப்படுத்தல், சோதனை செய்தல் மற்றும் சந்தேகத்திற்குரிய சரியான நேரத்தில் மேலாண்மை செய்தல்" என்பதை தாரக மந்திரமாக கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மீண்டும் தீவிர படுத்த மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
அதேபோன்று ரத்தம் மாதிரிகளை நாள்தோறும் மரபணு ஆய்வகத்திற்கு அனுப்புமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் தற்பொழுது கொரோனா பாதிப்பு குறைந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவையான மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் காலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Central govt letter to state govts to intensify measures to prevent Corona