மக்கள் பீதி! பரவும் வைரஸ்! 14 வயசு சிறுவன் பலி! மத்திய சுகாதார குழு ஆய்வு! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் நிபா வைரஸுக்கு சிறுவன் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து மத்திய சுகாதார குழு கேரளாவுக்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரளா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் டெங்கு, டைபாய்டு, எலிக்காய்ச்சல், பன்றி காய்ச்சல் போன்ற ஏராளமான வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகின்றன. பருவ மழை பெய்ய தொடங்கிய பிறகு பல்வேறு காய்ச்சல்கள் தொற்று நோய்களின் பரவல்கள் அதிகரித்து வருகிறது.

தற்போது நிபா மூளைக்காய்ச்சல் பெஸ்ட் நைட் உள்ளிட்ட அரிய வகை காய்ச்சலும் பரவி வருகின்றதால் மக்கள் வீதி அடைந்துள்ளனர். இந்தநிலையில் சமீபத்தில் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுவன் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த சிறுவனின் உடல் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் மாதிரிகளை எடுத்து புனேவில்  உள்ள வைராலஜி பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டது. சிறுவனுக்கு நிபா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்த சிறுவன் உயிர் இழந்த சம்பவத்தை அடைத்து, சிறுவனின் குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் என கிராமத்தில் உள்ள 330 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்களை நேரடியாக கண்காணிக்க சுகாதாரத்துறை கிராமத்தில் முகாம் ஈட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில்  மலப்புரத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அடுத்து நிபா வைரஸ் குறித்த வழிகாட்டல் நெறிமுறைகளை அரசு தீவிரமாக விழிப்புணர்வு செய்து வருகிறது.

தற்போது 68 வயது முதியவர் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநிலம் முழுவதும் சுகாதாரப் பணிகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நிபா வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள நிலையை ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதாரத் துறையின் மருத்துவ குழு கேரளா விரைந்துள்ளதாக தகவல் வெளியே எங்கு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central health team has reached Kerala following the death of a boy due to Nipah virus in the state of Kerala


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->