எமர்ஜென்சி கதவு திறந்ததற்கு மன்னிப்பு கேட்டாச்சு... தேஜஸ்விக்கு மத்திய அமைச்சர் வக்காலத்து...!! - Seithipunal
Seithipunal


கடந்த டிசம்பர் 10ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சி சென்ற இண்டிகோ விமானத்தின் தேஜஸ்வி சூர்யாவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் பயணம் செய்தனர். காலை 10 மணிக்கு புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. விமானத்தின் வலது பக்கத்தில் இருந்த எமர்ஜென்சி கதவை திறந்ததால் பயணிகளின் பாதுகாப்பு கருதி விமானம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு புறப்பட்டு சென்றது.

அந்த எமர்ஜென்சி கதவை பாஜகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா திறந்ததாக பயணிகள் குற்றம் சாட்டினர். அதற்கு தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டதுடன் எழுத்துப்பூர்வமாக விமான குழுவினருக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு பிறகு மத்திய விமான போக்குவரத்து துறை ஆணையரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா "இண்டிகோ விமானத்தின் ஏஜென்சி கதவை திறந்தது தேஜஸ்வி சூர்யா தான் என உறுதியாகி உள்ளது. கவனமாக இருப்பது அவசியம். இந்த சம்பவம் நடந்தவுடன் உடனடியாக தேஜாஸ்வி சூர்யாவே விமான குழுவினருக்கு தெரிவித்து விட்டார். எனினும் டி.ஜி.சி.ஏ-வின் நெறிமுறை பின்பற்றப்பட்டது.

அனைத்து சோதனைகளுக்குப் பிறகு விமானம் மீண்டும் புறப்பட்டு சென்றது. இந்த தவறுக்காக அவர் மன்னிப்பு கேட்டு விட்டார்" என தேஜஸ்வி சூர்யாக்கு ஆதரவாக பேசியுள்ளார். எனினும் தேஜஸ்வி சூர்யாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central minister explain apologized for opening indigo emergency door issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->