வாக்காளர்களுக்கு நிம்மதி பெருமூச்சு.. மத்திய அமைச்சர் அறிவிப்பு.!
Central minister kiran rajiju about adhar and voter Id
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் இல்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டியது அவசியம் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது. அப்படி இணைக்கவில்லை என்றால் அந்த நபரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என்று தெரிவித்தது.
இது வாக்காளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர். இத்தகைய நிலையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தனி நபர்களின் விருப்பம் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
மேலும், இதன் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து ஆதாரை இணைக்காத நபர்களின் பெயர் நீக்கப்படாது என்பது தெரியவந்துள்ளது. இது வாக்காளர்களுக்கு நிம்மதி பெரும் மூச்சை கொடுத்துள்ளது.
English Summary
Central minister kiran rajiju about adhar and voter Id