மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு தொலைபேசியில் மிரட்டல்...!! - Seithipunal
Seithipunal


மத்திய பாஜக அரசின் சாலை போக்குவரத்து துறை அமைச்சராக நிதின் கட்கரி இருந்து வருகிறார். இவர் சமீப காலமாக மத்திய அரசின் சாலை கட்டுமான பணிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு அடுத்தடுத்து இரண்டு முறை தொலைபேசியின் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

 

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் அவருக்கு மிரட்டல் விடும் வகையில் பேசி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்த நிலையில் மர்ம நபர்கள் மிரட்டிய சம்பவம் குறித்து நாக்பூர் போலீசாரிடம் அமைச்சர் நிதின் கட்கரி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் கூடிய விரைவில் பிடிபடுவார்கள் என நாக்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Minister Nitin Gadkari threatened over phone


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->