53 தொழில்கள் மூலம் ரூ.11 ஆயிரம் கோடி முதலீடு செய்ய தமிழக அரசு ஒப்பந்தம் - மத்தியஅரசு தகவல்.! - Seithipunal
Seithipunal


நேற்று  மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய்பட் பதிலளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

"தன்னிறைவு இந்தியா" மற்றும் 'மேக் இன் இந்தியா' என்ற இலக்கை அடைவதற்கு நாட்டில் இரண்டு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதில் ஒன்று உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா, அலிகார், சித்ரகூட், ஜான்சி, கான்பூர் மற்றும் லக்னோ உள்ளிட்ட வழித்தடத்தில் அமைகிறது. 

மற்றொன்று தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருச்சி, கோவை, ஓசூர், சேலம் உள்ளிட்ட வழித்தடத்தில் அமைகிறது. தமிழக அரசிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி 53 தொழில்கள் மூலம் ரூ.11 ஆயிரத்து 794 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதற்காக ஏற்கனவே ரூ.3,847 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக மொத்தம் 910 ஹெக்டேர் பரப்புடைய நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central minister of defence ajaypat speach in rajyashaba


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->