''அடுத்த ஆண்டு பீகாரில் இந்த கட்சிதான் ஆட்சி அமைக்கும்'': மத்திய மந்திரி பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பாஜக கூட்டணியில் இணைய போவதாக நேற்று முன்தினம் செய்தி பரவியதிலிருந்து தற்போது வரை பீகார் மாநிலத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்தியா கூட்டணியின் மீதான அதிருப்தி, ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கலந்து கொள்ள மறுத்தது போன்ற காரணங்களால் அவர் பாஜக கூட்டணியில் இணைய முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

பா.ஜனதாவுடன் நிதிஷ்குமார் கூட்டணி அமைத்து 9 வது முறையாக பிகார் முதல்வராக பதவி ஏற்க இருப்பதாகவும் இரண்டு பேர் துணை முதல்வராக பதவி ஏற்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் மத்திய மந்திரி ராஜ் சிங் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, வரும் 2025 ஆம் ஆண்டில் பீகாரில் பா.ஜ.க நிச்சயம் ஆட்சி அமைக்கும். 

பீகாரில் அடுத்த ஆண்டு மக்கள் பாஜகவுக்கு நிச்சயம் வாக்களிப்பார்கள். மேலும் மாநிலத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை பார்வையிடுவதற்காக வந்துள்ளேன் என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central minister sensational information


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->