மிரட்டிய இந்திய அணி: திணறிய பாகிஸ்தான் வீரர்கள்! 241-க்கு ஆல்-அவுட்!
Champions Trophy IND vs PAK match 2025
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வரும் ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
துபாயில் இன்று மதியம் தொடங்கிய இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இமாம் உல் ஹக் மற்றும் பாபர் அசாம் சிறப்பாக தொடங்க முடியாமல், முறையே 10 மற்றும் 23 ரன்களில் அவுட்டாகினர். இதனால், தொடக்கத்திலேயே பாகிஸ்தான் ரன் சேர்க்க முடியாமல் தவித்தது.
பின்னர், கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் ஷகீல் இணைந்து அணியை கட்டுக்கோப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதில், ஷகீல் 76 பந்துகளில் 62 ரன்கள் அடித்து அரைசதம் கடந்தார். ரிஸ்வான் 77 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். இறுதிக்கட்டத்தில், குஷ்தில் ஷா 39 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார்.
இந்திய அணியின் பந்து வீச்சில், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹார்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார், அக்ஷர் படேல், ஹர்ஷித் ராணா மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனையடுத்து 241 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கி ஆடு வருகிறது.
English Summary
Champions Trophy IND vs PAK match 2025