தாய் உயிரிழப்பு; சடலத்தில் காலில் விழுந்து ஆசி பெற்று, பிளஸ் 2 தேர்வு எழுத சென்ற மாணவன்; உறவினர்கள் கண்ணீர்..! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. லட்சக்கணக்கான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். இந்நிலையில், திருநெல்வேலியில் தாய் உயிரிழந்த சோகத்திலும் மாணவன் ஒருவர் பிளஸ் 2 மாணவன் பொதுத்தேர்வை எழுதியுள்ளார். 

திருநெல்வேலி வள்ளியூரைச் சேர்ந்த மாணவன் சுனில் குமார் என்பவரின் தாயார் இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்துள்ளார். இன்று அதிகாலை அவர் காலமாகியுள்ளார்.இன்று தாய் உயிரிழந்த நிலையிலும், பிளஸ் 2 மாணவன் தேர்வு எழுதச் சென்று விட்டு, பிறகு இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட நிகழ்வு அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

காலை பிளஸ் 2 தேர்வுக்கு தயாராகி இருந்த சுனில் குமார், உயிரிழந்த தாயின் காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொண்டு, கண்ணீருடன் சென்று தேர்வு எழுதியுள்ளார். அத்துடன் அவர் தேர்வை முடித்து விட்டு வந்து இறுதிச்சடங்கில் பங்கேற்று, தாயுக்கு பிரியாவிடை கொடுத்த சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A student went to write the Plus 2 exams after falling at the feet of his deceased mother and seeking blessings


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->