மோடிக்காக தான்... பதவியேற்பை தள்ளிவைத்த சந்திரபாபு நாயுடு! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal



நாட்டில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று கடந்த நான்காம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி அபார வெற்றி அடைந்தது. 

மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு ஆட்சி அமைத்தார். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் இருந்த நிலையில் இந்த முறை ஜகன்மோகன் ரெட்டி படுதோல்வி அடைந்தார்.

எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத அளவிற்கு மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு வருகின்ற 8 ஆம் தேதி அமராவதியில் முதல் மந்திரியாக பதவி ஏற்க இருந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

நரேந்திர மோடி வருகின்ற 8 ஆம் தேதி பதவி ஏற்பதால் அந்த விழாவில் சந்திரபாபு நாயுடு பங்கேற்க உள்ளார். இதற்காக தனது பதவியேற்பு விழாவை சந்திரபாபு நாயுடு தள்ளி வைத்துள்ளார். 

மேலும் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா வருகின்ற 12ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandrababu Naidu postponed swearing Modi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->