2000 ரூபாய் நோட்டுக்கள் ரத்து.. ஊழலுக்கான தீர்வு.. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு.! - Seithipunal
Seithipunal


2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற ரிசர்வ் வங்கியின் முடிவை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு வரவேற்றுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு இந்தியாவில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 1000 ரூபாய் நோட்டிற்கு பதிலாக பிங்க் நிறத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்தது.

இந்த புதிய 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்த சில நாட்களிலேயே அதிகளவிற்கு அச்சடிக்கப்பட்டதால் கடந்த 2019 ஆம் ஆண்டு அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், வரும் செப்டம்பர் 30ம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை தங்களது சொந்த வங்கி கணக்கில் செலுத்துவதற்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்று வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். 

இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெரும் முடிவை ஆந்திர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் ஊழல் ஒதுக்கல் மற்றும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு மூல காரணமான அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று நான் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறேன்.

இது பொருளாதாரத்தை உயர்த்துவது மட்டுமில்லாமல் மக்களின் பெரிய நன்மைக்காக நேர்மையுடன் உழைக்கும் நேர்மையான பொதுமக்களின் முயற்சிகளுக்கு மிகப் பெரிய மதிப்பை கொடுக்கும். இந்த நடவடிக்கை மூலம் மக்கள்களுக்கு இடையே வன பட்டு பாடாவை பெரிய அளவில் தடுக்க உதவும். 2000 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டால் ஊழலுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandrababu Naidu support to RBI withdraw 2000 rupees


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->