நிலவுக்கு புறப்படும் சந்திராயன் 3 விண்கலம்! திருப்பதி கோயிலில் விஞ்ஞானிகள் குழு வேண்டுதல்!
Chandrayaan 3 launch ISRO scientists arrive at Tirupati Temple
சந்திராயன் 3 விண்கலம் நாளை நிலவுக்கு ஏவப்பட உள்ள நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டு நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன்-2 விண்கலத்தை இந்தியா விண்ணில் ஏவிய போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவின் மேற்பகுதியில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
ஆனால், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இந்த ஆர்பிட்டர் நிலவின் மேற்பகுதியை ஆய்வு செய்து பல்வேறு புகைப்படங்களை அனுப்பி வைத்தது.
இந்த நிலையில், ஆர்பீட்டர் நிலவை சுற்றி வருவதால் சந்திராயன்-3 திட்டத்தின் மூலம் லேண்டர் மற்றும் ரோவர் மட்டும் அனுப்ப திட்டமிடப்பட்டு, ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திராயன்-3 விண்கலம் நாளை பிற்பகல் 2:35 மணி அளவில் விண்ணில் ஏவப்பட உள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதலத்தில் இருந்து சந்திராயன்-3 விண்கலம் ஏவப்பட உள்ளது.
இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளனர்.
சந்திராயன்-3 விண்கலத்தின் மினியேச்சர் வடிவத்தை கையோடு கொண்டு வந்த விஞ்ஞானிகள், அவற்றை இறைவனின் பாதத்தில் வைத்து 'சந்திராயன்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட வேண்டும்' என வேண்டிக் கொண்டுள்ளனர்.
இந்த திட்டத்தின்படி ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திராயன்-3 விண்கலம் வரும் ஜூலை 14ஆம் தேதி பிற்பகல் 2:35 மணி அளவில் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக தற்பொழுது அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதலத்தில் இருந்து சந்திராயன்-3 விண்கலம் ஜி.எஸ் எல்.வி மார்க்-3 ராக்கெட்டில் ஏவப்பட உள்ளது.
சந்திராயன்-3 விண்கலம் லேண்டர், ரோவர் மற்றும் உந்துவிசை ஆகியவற்றுடன் நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக இறங்கி உலாவரும் அளவிற்கு லேடர் மற்றும் ரோவர் நவீன கட்டமைப்பை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Chandrayaan 3 launch ISRO scientists arrive at Tirupati Temple