சந்திரயான்-3 மிஷனில் இணையும் பிரதமர் மோடி! அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


உலகமே எதிர்நோக்கி இருக்கும் சந்திரயான்-3 விண்கலத்தில் செலுத்தப்பட்ட லேண்டர் தரையிறங்கும் நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி இணையவழியாக பங்கேற்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதி எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலமானது விண்ணில் ஏவப்பட்டது.

இந்நிலையில், இன்று மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டரும், அதனுள் இருக்கும் ரோவா் சாதனமும் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது.

இந்த நிகழ்வை மாலை 5.20 முதல் இஸ்ரோ நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது. இதுவரை அணைத்து செயல்பாடுகளும் சரியாக இருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி இஸ்ரோவில் நிகழ்வில் இணையவழியில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிகா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கிருந்து இணையவழியில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தில் அருகே தடம்பதித்த உலகின் முதல் தேசமாக இந்தியா உருவெடுக்குமா என்ற ஆவலில் இந்திய மக்கள் மட்டுமின்றி உலகமே எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandrayaan 3 mission PMModi joint in online


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->