நிலவில் சந்திரயான் தரையிறங்கும்போது நடந்த சம்பவம்! முதல்முறையாக அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட இஸ்ரோ!
Chandrayan soft landing in moon isro more info
நிலவில் சந்திரயான் லேண்டா் கலன் தரையிறங்கும்போது 2.06 டன் மண் துகள்கள் மேலெழும்பியதாக இஸ்ரோ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
நிலவின் தென் துருவம் அருகே ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்த எல்விஎம்-3 ராக்கெட் மூலம், கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டா் விண்ணில் செலுத்தப்பட்டது.
பூமி மற்றும் நிலவின் பல சுற்றவற்றை பாதைகளை கடந்து, ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி நிலவில் வெற்றிகரமாக சந்திரயான் லேண்டா் கலன் தரையிறங்கியது.
பின்னர், 14 நாள்கள் லேண்டரும், ரோவரும் நிலவின் மேற்பரப்பையும், ரசாயனத் தன்மைகளையும் ஆய்வு செய்து பல்வேறு அரிய தகவல்களையும், புகைப்படங்களையும் அனுப்பின.
இந்த நிலையில், லேண்டரை தரையிறக்கும்போது நிலவின் மேற்பரப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து முதல் முறையாக இஸ்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரோவின் அந்த செய்திக்குறிப்பில், பொதுவாக விண்கலனை நிலவில் தரையிறக்கும்போது மேற்பரப்பில் உள்ள மண், துகள்கள் புழுதிபோன்று மேலெழுவது இயல்பு. அந்த வகையில், சந்திரயான் லேண்டா் கலன் இறங்கும்போதும் 2.06 டன் மண் மற்றும் ரசாயனத் துகள்கள் வெளியேறி 108.4 மீட்டா் பரப்பளவுக்கு தெளிவான தரைப்பரப்பு உருவானதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
English Summary
Chandrayan soft landing in moon isro more info