விடுதலையானார் சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ்.! வேடிக்கை பார்க்க கூடிய கூட்டம்.!  - Seithipunal
Seithipunal


தொடர்ச்சியான கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர் சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ். 

இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் இவர் 1975ல் வட அமெரிக்க சுற்றுலாப் பயணி கோனி ஜோ ப்ரோன்சிச்சைக் கொலை செய்த குற்றத்திற்காக 2003ல் நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் கைது செய்யப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது..

மேலும் கனடாவில் செய்யப்பட்ட மற்றொரு கொலையும் நிரூபிக்கப்பட்டு அதற்கான சிறை தண்டனை பெற்று வந்தார். அதன் பின், நல்ல நடத்தையின் அடிப்படையில் தன்னை விடுதலை செய்யக்கோரி சார்லஸ் சோப்ராஜ் நேபாள அரசிடம் மனு அளித்திருந்தார். 

இதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஸப்னா பிரதான் மல்லா மற்றும் திலக் பிரசாத் சிரேஷ்டா ஆகியோா் சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜை விடுவிக்குமாறு உத்தரவிட்டனர்.மேலும், 15 நாட்களுக்குள் அவருடைய நாட்டிற்கு திருப்பி அனுப்புமாறு நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது சிறையில் இருந்து சார்லஸ் சோப்ராஜ் விடுதலையாகி வெளியில் வந்துள்ளார். அவரது சிறையிலிருந்து வெளியாவதை காண அப்பகுதியில் நிறைய கூட்டம் கூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Charles choraj released From jail


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->