புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை இன்று விசாரணைக்கு வந்தபோது, "டிச.31ஆம் தேதி மதுபானம் விற்க ஏன் தடை விதிக்க கூடாது? என்று புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும், கட்டுப்பாடுகள் விதித்தாலும் மது அருந்துபவர்கள் அதனை கடைபிடிக்க மாட்டார்கள் என்று கருது தெரிவித்த நீதிபதிகள், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை கோரிய மனு மீது புதுச்சேரி அரசு விளக்கம் அளிக்க விசாரணை சற்று நேரம் தள்ளி வைத்தது.

இந்நிலையில், சற்றுமுன் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், டிச.31ஆம் தேதி இரவு 10 மணி முதல் இரவு 1 மணிவரை மட்டுமே மது விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai hc order fot PUDUCHERRY new year liquor sale


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->