வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் தோறும் 2500 ரூபாய் ஊக்க தொகை! அதிரடி பட்ஜெட் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் 2500 ரூபாய் ஊக்க தொகை வழங்கப்படும் என்று, சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் அறிவித்துள்ளார். 

2023-24 ம் ஆண்டுக்கான சத்தீஸ்கர் மாநில பட்ஜெட் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் பூபேஷ் பாகேல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

இந்த பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்பாக 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் ஊக்கத் தொகை வழங்கப்படும் அறிவிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஊக்கத்தொகை : வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.2500 ஊக்கத் தொகை வழங்க வாழை வகை செய்யப்பட்டுள்ளது.

தகுதி : 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட வேலை இல்லாத இளைஞர்களுக்கு வழங்கப்படும். ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வருவாய் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

மேலும் இந்த பட்ஜெட்டில் அங்கன்வாடி ஊழியர்களுக்கான மாதாந்திர ஊதியத்தை ரூ.6500 -இல் இருந்து பத்தாயிரம் ரூபாயாக அதிகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chhattisgarh CM budget announcement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->