4 கால்களுடன் அதிசய கோழி குஞ்சு.. ஆச்சர்யமாக பார்த்து செல்லும் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


4 கால்களுடன் பிறந்த அதிசய கோழிக்குஞ்சு குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அருகில் உள்ள பூமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் சக்தி முருகன். இவர் தனது வீட்டில் கோழிகள் வளர்த்து வருகிறார். இதில் கடந்து சில நாட்களுக்கு முன்பு 10-க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் பொறித்தது.

இதில், ஒரு கோழிக்குஞ்சு மட்டும் வித்தியாசமாக பிறந்துள்ளது. அதாவது ஒரு கோழிக்குஞ்சுக்கு 4 கால்களுடன் பிறந்துள்ளது. 2 கால்கள் சிறியதாகவும், 2 கால்கள் பெரியதாகவும் பிறந்துள்ளது.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும் இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chicken with 4 legs in Pudhuchery


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->