Breaking: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் முதல்வர்! அறிவுரை வழங்கிய ராகுல் காந்தி!
Chief Minister contesting for the post of Congress President and Rahul Gandhi gave advice
கேரள மாநிலத்தில் ராகுல் காந்தியை சந்தித்த பின்னர் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு!
நேற்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் கமிட்டி குழு தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டு இருந்தார். அந்த அறிவிப்பில் வேட்புமனு தாக்கல், வேட்பு மனு பரிசீலனை, மற்றும் தேர்தல் தேதி ஆகியவை அறிவிக்கப்பட்டிருந்தது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு நேரு குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிட மாட்டார்கள் என ராகுல் காந்தி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அல்லது காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் இவர்களில்ஒருவர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ராகுல் காந்தி கேரள மாநிலத்தில் தற்போது நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். ராகுல்காந்தியை சந்தித்து பேசிய பின் செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு ராகுல் காந்தி போட்டியிடவில்லை. எனவே அந்த பதவிக்கு நானே போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார்.
நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி " காங்கிரஸ் தலைவர் பதவி என்பது வரலாற்று சிறப்புமிக்க பதவி, இந்தியாவுக்கான குறிப்பிட்ட கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் பதவி, ஆலோசனை மிக்க கருத்துக்களை தெரிவிக்கும் பதவி, நல்ல கருத்துக்களை நம்பிக்கைகளை தெரிவிக்கும் நபராகவும் இந்தியாவின் தொலைநோக்கு சிந்தனை உள்ளவராகவும் நீங்கள் இருக்கப் போகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என அறிவுரை வழங்கி இருந்தார்.
ஏற்கனவே பல மாநில காங்கிரஸ் கட்சிகள் ராகுலை மீண்டும் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றி இருந்தன.
காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி போட்டியின்றி தேர்ந்தெடுக்க கூடும் என பரவலாக பேசுப்பட்டு வரும் நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முதல் நபராக தான் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.
English Summary
Chief Minister contesting for the post of Congress President and Rahul Gandhi gave advice