கழிவறைக்கு "கக்கன்" பெயர்! கோவை மாநகராட்சியின் தரம்தாழ்ந்த செயல்! அண்ணாமலை கடும் கண்டனம்!
BJP Annamalai condemn to DMK Mk Stalin Govt Kakkan Anna name issue
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கழிவறை ஒன்றுக்கு முன்னாள் அமைச்சர் கக்கனின் பெயர் வைத்ததற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "கோவை மாநகராட்சியில், முன்னாள் தமிழக முதலமைச்சர் அண்ணாதுரை மற்றும், பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில் பணியாற்றிய நேர்மையான தலைவர் கக்கன் ஆகியோர் பெயரை, கழிப்பறைக்கு வைத்திருக்கிறார்கள். எளிமையான இரண்டு தலைவர்களை அவமதிக்கும் கோவை மாநகராட்சியின் இந்த தரம்தாழ்ந்த செயலுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் பேருந்து நிலையங்கள், அரசு கட்டிடங்களுக்கெல்லாம் தனது தந்தை பெயரை வைத்து அழகு பார்க்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவரை விட மகத்தான தலைவர்கள் பெயரை, கழிப்பறைக்கு வைப்பது, அவர்களை அவமானப்படுத்தும் நோக்கமே அன்றி வேறென்ன?
உடனடியாக, கழிப்பறையில் இருந்து தலைவர்கள் பெயரை அழிக்க வேண்டும் என்றும், இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Annamalai condemn to DMK Mk Stalin Govt Kakkan Anna name issue