தன் உயிரையும் பொருட்படுத்தாமல் துணிந்து சிறுவனை காப்பாற்றிய வீர தமிழனுக்கு எடப்பாடி பழனிச்சாமி நேரில் பாராட்டு!
ADMK EPS Wish to Youngster kannan
சென்னை வளசரவாக்கம் பகுதியில் கடந்த 16.04.2025 அன்று, தேங்கிய மழைநீரில் நடந்து சென்றபோது மின்சாரம் தாக்கிய சிறுவன் ஒருவர் உயிருடன் போராடி கொண்டிருந்த நிலையில், தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் துணிந்துவைத்து செயல்பட்ட இளைஞர் தா. கண்ணன், அச்சிறுவனைக் காப்பாற்றினார்.
அவரது தைரியம் மற்றும் மனிதநேயம் நிறைந்த செயலுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. இந்நிலையில், தா. கண்ணனின் செயலுக்கு பெருமை சேர்த்து, கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் பாராட்டு தெரிவித்ததோடு, அவருக்காக ஒரு தங்க மோதிரத்தையும் பரிசளித்து வாழ்த்தை தெரிவித்தார்.
தாய்மையோடு பாசத்துடன் செயல்பட்ட இளைஞரின் செயல் பலராலும் பாராட்டப்பட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமியும் நேரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK EPS Wish to Youngster kannan