கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை : கோவாவுக்கு விமான கட்டணம் உயர்வு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இந்த ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருகிற 23-ந்தேதி வரை அரையாண்டு வகுப்புகள் நடைபெறுகிறது. இந்தத் தேர்வு முடிவடைந்தவுடன் 24-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 1-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. 

இதனால், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை தனது சொந்த ஊருக்கும், சுற்றுலா நகரங்களுக்கும் சென்று கொண்டாடுவதற்கு பொதுமக்கள் திட்டமிட்டு அதற்காக ரெயில்களில் முன்பதிவும் செய்து வருகின்றனர்.

அதேபோல், ஆம்னி பேருந்து கட்டணமும் விமான கட்டணம் போல் இருப்பதால்  பலரும் விமான பயணத்தை விரும்புகின்றனர். இதன் மூலம் பயண நேரம் மிச்சப்படுவதுடன், மிக விரைவாகவும் செல்ல முடிகிறது என்பதால் பொதுமக்கள் விமானங்களில் பயணம் செய்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். 

இதன் காரணமாக, பன்னாட்டு விமான கட்டணம் மட்டுமல்லாமல், உள்நாடுகளுக்கு இடையே இயக்கப்படும் விமானங்களின் கட்டணமும் உயர்ந்துள்ளது.  
அதிலும் குறிப்பாக ஸ்ரீநகர், சண்டிகர், கோவா, கொச்சி உள்ளிட்ட உள்நாட்டு பல சுற்றுலா தலங்களுக்கு விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. 

கோவாவுக்கு வழக்கமாக ரூ.4,500 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.13,000 முதல் 14,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே போல் கொச்சினுக்கு ரூ.4 ஆயிரமாக இருந்த கட்டணம் தற்போது ரூ.10 ஆயிரமாக வசூலிக்க படுகிறது.

இது தொடர்பாக விமான நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, "விமானங்களில் குறைந்த கட்டண பயணசீட்டுகள் குறிப்பிட்ட அளவு தான் ஒதுக்கப்படும். அந்த பயணசீட்டுகள் விற்பனை ஆனதால் அதிகமான கட்டணம் கொண்ட பயணசீட்டுதான் கிடைக்கும். இது வழக்கமான நடைமுறைதான்" என்றுத் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

christmas newyear holiday gova flight ticket amount increase


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->