ரூ.2,000 நோட்டுகளின் புழக்கம் தொடா்ந்து குறைந்து வருகிறது.! ரிசா்வ் வங்கி.!
Circulation of two thousand rupee notes is declining
ரூபாய் 2000 நோட்டுகளின் புழக்கம் தொடர்ந்து குறைந்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நிகழாண்டு மார்ச் மாத இறுதிவரையில் ரூபாய் 2000 நோட்டுகளின் எண்ணிக்கையிலான புழக்கம் 214 கோடி குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
புழக்கத்தில் உள்ள அனைத்து வகை ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை நிகழாண்டு மாா்ச் வரையில் 13,053 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டு 12,437 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2020-ல் ரூ.2,000 நோட்டுகளின் எண்ணிக்கையிலான புழக்கம் 274 கோடியாக (2.4%) இருந்த நிலையில் 2021-ல் 245 கோடி (2%). தற்போது 2022, மாா்ச் வரையில் இது 214 கோடியாக (1.6%) உள்ளது.
புழக்கத்தின் அடிப்படையிலான ரூ.2000 நோட்டின் மதிப்பு 2020-ல் 22.6 சதவீதத்தில் இருந்து 2021-இல் 17.3 சதவிதமாகவும், 2020-இல் 17.3 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு 3,867.90 கோடியாக இருந்த ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கை வகையிலான புழக்கம் நிகழாண்டு மாா்ச் வரையில் 4,554.68 கோடியாக உயா்ந்துள்ளது.
அதிகப்படியான எண்ணிக்கையிலான ரூபாய் நோட்டுகளாக 500 ரூபாய் 34.9 சதவீதமாகவும், அடுத்தபடியாக பத்து ரூபாய் 21.3 சதவீதமாக உள்ளது.
English Summary
Circulation of two thousand rupee notes is declining