அடுத்த மூன்று ஆண்டுகளில் 80 புதிய விமான நிலையங்கள்! மத்திய அரசு தகவல்.!
Civil aviation new airports
அடுத்த மூன்று ஆண்டுகளில் 80 புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, நாடு முழுவதும் கடந்த 7 ஆண்டுகளில் 66 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 140 விமான நிலையங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் 80 விமான நிலையங்கள் உருவாக்கபட்டு அவற்றின் எண்ணிக்கையை 220 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த ஒரு வாரமாக தினமும் 3 லட்சத்து 80 பேர் விமான பயணம் மேற்கொண்டு வருவதாகவும், அடுத்த மூன்று ஆண்டுகளில் இது மூன்று மடங்காக அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும் ஜெட் மற்றும் அசாகா ஆகிய இரண்டு புதிய விமான சேவைகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர்வ்தெரிவித்தார்.
English Summary
Civil aviation new airports