கேரளாவில் துப்புரவு பணியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட் - பத்து கோடி பரிசு மழை.!!
cleaning workers won ten crores lottary seat in kerala
கேரளாவில் துப்புரவு பணியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட் - பத்து கோடி பரிசு மழை.!!
நமது அண்டை மாநிலமான கேரளாவில் அரசு சார்பில் லாட்டரி சீட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பருவ மழைக்கால லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெற்றது. இதில் பம்பர் பரிசாக ரூ.10 கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனால், லாட்டரி சீட்டு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் லாட்டரி குலுக்கல் நடைபெற்றதில் எம்.பி. 200261 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு பம்பர் பரிசான ரூ.10 கோடி விழுந்தது. ஆனால், அந்த லாட்டரி சீட்டை வாங்கியவர்கள் யார்|? என்பது முதலில் தெரியாமல் இருந்தது.
பின்னர் அந்த லாட்டரி சீட்டை மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி நகராட்சியில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரியும் 11 பேர் சேர்ந்து வாங்கியது தெரியவந்தது. இந்த செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த அவர்கள் அனைவரும் இந்த லாட்டரி சீட்டை பரப்பனங்காடியில் உள்ள ஒரு வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர்.
இது தொடர்பாக துப்புரவு பணியாளர்கள் தெரிவித்ததாவது:- "நாங்கள் பரப்பனங்காடி நகராட்சியில் குப்பைகளை சேகரித்து, தரம் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாங்கள் 11 பேரும் பரப்பனங்காடியில் நின்று கொண்டிருந்தபோது பாலக்காட்டில் உள்ள ஏஜென்சியை சேர்ந்த விற்பனையாளர் அங்கு வந்தார்.
அவர் எங்களிடம் லாட்டரி சீட்டு வாங்குமாறும், ஒரு சீட்டின் விலை ரூ.250 என்றும் தெரிவித்தார். இதையடுத்து நாங்கள் 11 பேரும் சேர்ந்து ஒரே ஒரு லாட்டரி சீட்டு வாங்க முடிவு செய்து, ரூ.250 செலுத்தி லாட்டரி சீட்டு வாங்கினோம்.
இறுதியாக நடைபெற்ற குலுக்கலில் நாங்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பம்பர் பரிசாக ரூ.10 கோடி விழுந்தது. இந்த தொகையை நாங்கள் பங்களித்த தொகைக்கு ஏற்ப பிரித்து எடுத்துக்கொள்ளப்போகிறோம்" என்றுத் தெரிவித்தனர்.
English Summary
cleaning workers won ten crores lottary seat in kerala