குஜராத்தில் பரபரப்பு.! வினாத்தாள் வெளியானதால் அரசுத் தேர்வு ரத்து.!  - Seithipunal
Seithipunal


நேற்று குஜராத் மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்வு வாரியம் சார்பில் ஆயிரத்து நூற்று எண்பத்து ஒன்று கிளார்க் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வை எழுதுவதற்காக ஒன்பதரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். 

இந்த நிலையில், நேற்று தான் இந்த தேர்வுக்கான வினாத்தாள் வெளியான தகவல் குறித்த விவரம் தெரியவந்தது. இந்த தகவலின் படி, போலீசார் விசாரணை செய்தபோது, வினாத்தாள் நகலுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.                            

அதன் பின்னர், இந்தத் தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மாநில அரசு தேர்வை ரத்து செய்தது. இது குறித்து, பஞ்சாயத்து துறை மேம்பாட்டு கமிஷனர் சந்தீப் குமார் தெரிவிக்கையில், "இந்த தேர்வு அடுத்த நூறு நாட்களுக்குள் நடத்தப்படும்" என்றுத் தெரிவித்தார். 

மேலும், தொலை தூரங்களில் இருந்து இந்தத் தேர்வை எழுதுவதற்காக வந்திருந்த தேர்வர்கள் பல இடங்களில் தேர்வு அதிகாரிகளுடன் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, வினாத்தாள் வெளியான விவகாரத்தில் வதோதராவில் இருந்து 15 பேரை மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

clerck exam cancel in gujarat for question papper leak


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->