தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆந்திர அரசு - தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டும் முதல்வர்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் என்று மூன்று மாநிலத்திலும் பயணிக்கிறது பாலாறு. இதில், ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே மாநில அரசு சார்பில் 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆற்றின் மூலம் தமிழகத்துக்கு வரும் தண்ணீர் அங்குள்ள தடுப்பணைகளில் சேமிக்கப்படுவதால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் மேலும் ஒரு தடுப்பணைக்கு அடிக்கல் நாட்டுகிறார் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி. இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல, 2 வழக்குகள் ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டது. 

இது தவிர பாமக சார்பிலும் ஒரு வழக்கு ஆந்திர அரசுக்கு எதிராக தொடரப்பட்டு அந்த வழக்குகள் தற்போது நடந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு மார்ச் மாதம் 13-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm jegan mohan reddy lay the foundation stone build barrage 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->