ரெயில்பெட்டி குறைப்பு - முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் இயக்கப்படும் ரெயில்களில் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை நான்கில் இருந்து இரண்டாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 26 ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து, அதற்கு பதிலாக ஏ.சி. ரெயில் பெட்டிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளை குறைக்கும் நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;- "சமூக வலைத்தளம் முழுக்க ரெயில் பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம்! 

அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு!" என்றுத் தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cm mk stalin speech about train coach left issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->